2025 மே 05, திங்கட்கிழமை

மயானத்தில் மதுபானம் விற்ற இருவர் கைது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 19 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணிக்கப்போடி சசிகுமார்

மயானத்தில் வைத்து சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற இருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில் மறைத்து வைத்தே இவ்விருவரும் இன்று வியாழக்கிழமை மதுபானத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.

கள்ளியங்காடு மதுபான விற்பனை நிலையத்துக்கு முன்பாக உள்ள இந்து மயானத்திலேயே இவ்வாறு மதுபானங்களை மறைத்து வைத்து அவ்விருவரும் விற்பனை செய்து வந்ததாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

போயா தினத்தில் குறித்த மயானத்தில் வைத்து மதுபானம் விற்கப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கைது செய்ததாக மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றப் புலன் விசாரணைப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரி.ஏ.என்.டீ.திம்பட்டு முணுவவின் வழிகாட்டலில் என்.தமிழ்ச்செல்வன்,டபிள்யு.ரி.ஏ.மஜீத்,டபிள்யு.எம்.பிரியங்கர ஆகிய பொலிஸ் அதிகாரிகள் இவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவருரையும் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X