2025 மே 05, திங்கட்கிழமை

ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் எரியூட்டப்பட்டது

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கிரமத்திலுள்ள ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள்  இன்று அதிகாலை 1.45 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த ஆசிரியர் தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டு வாசலின் முற்றத்தின் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டில் உறங்கியுள்ளார் .

குறித்த ஆசிரியரின் வீட்டிற்கு இன்று அதிகாலை 1.45 மணியளவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேட்டார் சைக்கிளுக்கு எரியூட்டிவிட்டு வீட்டு யன்னலின் ஒரு பகுதினையும் உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளதாக குறித்த ஆசிரியர் தெரிவித்தார்.

வெளியில் சத்தம் கேட்கவே வீட்டிலுள்ளோர் வெளியில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் எரிவதை அவதானித்துள்ளனர். செட்டிபாளையம் தெற்கைச் சேர்ந்த குமாரகுலசிங்கம்-பிரதீபன் என்ற ஆசிரியரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X