2025 மே 05, திங்கட்கிழமை

'ஒரு பிள்ளைக்கு ஒரு வீடு' எனும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 'ஒரு பிள்ளைக்கு ஒரு வீடு' எனும் திட்டத்தின் கீழ் வவுணதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்படும் வீட்டுக்கான அடிக்கல் நேற்று வியாழக்கிழமை நாட்டிவைக்கப்பட்டது.

நீதிமன்றக் கட்டளைக்கு அமைய நன்னடத்தை திணைக்களத்தினுடாக ஓசானம் இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவருகின்ற  பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களை இழந்த கஜேந்தினி என்ற பிள்ளைக்கே இவ் வீடு நிர்மானிக்கப்படவுள்ளது.

நன்னடத்தைத் திணைக்களம் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தினால் நிர்மானிக்கப்படவுள்ள இவ் வீட்டிற்கான அடிக் கல்லினை மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நட்டிவைத்தார்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு நீதி நிர்வாக பிரிவிற்கான நன்னடத்தை அலுவலக பொறுப்பதிகாரி த.ஞானசௌந்தரி,ஓசானம் இல்ல பொறுப்பதிகாரி அருட்சகோதரி றெஜினா,நன்னடத்தை உத்தியோகஸ்தர் மா.வரதராஜன்,சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன்,நன்னடத்தைத் திணைக்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.ருத்ரமூர்த்தி,கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ரி.அரசகுமார்,இளைஞர் சேவை அதிகாரி மா.சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடிக்கல் நட்டப்பட்ட இவ் வீடு சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் 1ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X