2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எருமை மாடு அறுத்த நால்வர் பொலிஸாரால் கைது

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


சட்டவிரோதமான முறையில் எருமை மாடுகளை அறுத்த குற்றச்சாட்டின் பேரில் நான்கு சந்தேகநபர்களையும் மாட்டு இறைச்சி படி வாகனம் மற்றும் மாட்டு வண்டில் என்பவற்றையும் வாழைச்சேனை பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மீறாவோடை ஆற்று களப்புப் பகுதியில் எருமை மாடுகளை அருத்து விற்பனைக்காக கொண்டு செல்வதற்குத் தயாராக இருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எருமை மாட்டு இறைச்சியையும் அதனை ஏற்றிய வாகனம் மற்றும் நான்கு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சந்தேகநபர்களையும் இறைச்சி, வாகனம் மற்றும் வண்டில் என்பவற்றை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .