2025 மே 05, திங்கட்கிழமை

பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்களுக்கு சீருடை வழங்கிவைப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எச்.அமீர்


மூதூர் உதவி அரசாங்க அதிபர்  பிரிவிற்கான பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் வைபவம் இன்று சனிக்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் க.கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ். கிருபைராச சிங்கம்,கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வனிதா விஸ்வலிங்கம்,பொது முகாமையாளர் கே.காளிராசா துணைத்தலைவர் எஸ்.எம்.தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு சீருடை வழங்ப்பட்டதோடு திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ். கிருபைராச சிங்கத்தின் சேவையைப் பாராட்டி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரினால் தங்க மோதிரம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X