2025 மே 05, திங்கட்கிழமை

கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
சுவீடன் ஸ்றொக் ஹோம் நகரில் நடைபெற்ற நீர்ப்பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு காண்பதற்கு புத்தாக்கங்களை உருவாக்குதல் தொடர்பான சர்வதேச போட்டியில் இலங்கையின் சார்பாக கலந்து கொண்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்கள் சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளனர்.
 
கிளீன் சமூக சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு வலையமைப்பின் அனுசரணையுடன் சர்வதேச மட்டத்தில் மாணவர்களுக்கிடையில் இந்த போட்டி கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை நடைபெற்றது.
 
சர்வதேச நீர் தினத்தையொட்டி கல்வியமைச்சும் மேற்படி நிறுவனமும் இணைந்து இலங்கையில் இப்போட்டியை நடாத்தியது.
 
400 பாடசாலைகள் பங்கு பற்றிய நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புத்தாக்கங்களை ஏற்படுத்துதல் தொடர்பான போட்டியில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் சமர்ப்பித்த ஆய்வு இலங்கையில் முதல் இடம் பெற்று சர்வதேச போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.
 
இந்த வகையில் இது தொடர்பான சர்வதேச போட்டி சுவீடன் ஸ்றொக் ஹோம் நகரில் நடைபெற்றது.
 
இதில் 29 நாடுகளில் இருந்து பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 
இலங்கையில் தேசிய ரீதியல் முதலாமிடத்தினை பெற்ற மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை மாணவர்களான நவரட்ணராஜா கிசோர், சாந்தலிங்கம் கிசாந், நடராஜா வித்தியாகரன் ஆகிய மூன்று மாணவர்களும் சிவானந்த தேசிய பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியையான திருமதி எல்.எம்.பாத்லட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கால நிலை மாற்றத்தில் சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் தொடரபாக ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளில் புத்தாக்கங்களை உருவாக்குதல் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில் மேற்படி மாணவர்கள் ஆங்கில மொழியில் சமர்பித்த ஆய்வு சர்வதேச ரீதியில் ஐந்தாம் இடத்தினை பெற்றுள்ளது.
 
1997ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் சர்வதேச ரீதியில் நடை பெற்று வரும் இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டமை இதுவே முதற் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X