2025 மே 05, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நூர்தீன்
, மாணிக்கப்போடி சசிகுமார்
 
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
 
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா தலைமையில் நடைபெற்றது.
 
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்னாயக்கா மற்றும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் செயலாளர் பொலிஸ் பரிசோதகர் எஸ்.கொபேவல, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வி..வாசுதேவன் உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் ஆலோசனைக்கழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
இவ் மீளாய்வுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட 84 ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை என்பன வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X