2025 மே 05, திங்கட்கிழமை

கிழக்கில் கரணமடிக்கும் கிபீர்; மக்கள் அச்சம்

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை காலை கிபீர் விமானங்கள் பறந்தமையினால் மக்கள் அச்சமடைந்தனர்.

கடந்த யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிபீர் விமானங்கள் பறந்தபோது அதன் சத்தத்தை கேட்ட மக்கள் இன்று காலை மீண்டும் இதன் சத்தத்தை கேட்டு பதற்றமடைந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் கிபீர் விமானங்கள் பறந்ததனால் தேர் உற்சவத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடையே ஒரு பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்த கிபீர் விமானங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களிலேயே இன்று காலை பறந்துள்ளன.

இது தொடர்பாக மட்டக்களப்பிலுள்ள படை அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவியபோது,

"இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமையினாலேயே இந்த கிபிர் விமானங்கள் மட்டக்களப்பில் பறந்தன. இதையிட்டு எவரும் அச்சமடையத் தேவையில்லை" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X