2025 மே 05, திங்கட்கிழமை

சேதனப்பசளை உற்பத்தி, பாவனைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உள்ள கிண்ணயடிக் கிராமத்தில்  சேதனப் பசளை உற்பத்திகளையும் பாவனைகளையும் ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வாழைச்சேனை விவசாயப் போதனாசிரியர் ஆர்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்கள உதவி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா, வேல்ட்விஷன் நிறுவனத்தின் வாழைச்சேனை பிராந்திய முகாமையாளர் பி.றோகாஸ் உட்பட வாழைச்சேனை பிரதேச செயலக பட்டதாரி பயிலுநர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கூட்டெரு தாயாரித்தல், திரவப்பசளை தயாரித்தல், இயற்கைப் பீடைநாசினி தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும்,  இயற்கைப் பசளையால் ஏற்படும் நன்மைகள் தொடர்பில்  வேல்ட்விஷன் நிறுவனத்தின் வாழைச்சேனை பிராந்திய தொண்டர்களால் நாடகமும் நடித்துக் காட்டப்பட்டது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X