2025 மே 05, திங்கட்கிழமை

ஏறாவூரில் விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 25 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகர சபைப் பிரிவில் விசர்நாய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏறாவூர் நகர சபையின் மாதாந்த சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுமார் 40,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஏறாவூர் நகரில் பராமரிப்பில்லாத நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இறைச்சிக் கடைகள், மாடு அறுக்கும் தொழுவம் உட்பட  கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் பராமரிப்பற்ற நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கழிவுகைள அகற்றுவதில் ஏறாவூர் நகர சபை கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

இதுவொரு புறமிருக்க, பராமரிப்பில்லாத தெரு நாய்களால் மனிதர்களும் வளர்ப்புப் பிராணிகளும் கடித்துக் காயப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.  பல தடவைகள் விசர்நாய்க்கடிக்கு பலர் ஆளாகியுள்ளார்கள்.

இதனால் உடனடியாக ஏறாவூர் நகர சபைப் பிரிவில் விசர் நாய்களை ஒழிக்க வேண்டியும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியும் உள்ளது என்று ஏறாவூர் நகர சபையினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X