2025 மே 05, திங்கட்கிழமை

ஸ்ரீநாராயணன் ஆலய களஞ்சிய அறையில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட 35ஆம் கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைனகள் அந்தக் கிராமத்திலுள்ள ஸ்ரீநாராயணன் ஆலயத்தின் களஞ்சிய அறையை உடைத்துச் சென்று  சேதப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 5 இற்கும் மேற்பட்ட யானைகள்; வந்திருக்கலாம் என ஸ்ரீநாராயணன் ஆலயத்தின் செயலாளர் சுப்பிரமணியம் ரஞ்சன் தெரிவித்தார்.

ஸ்ரீநாராயணன் ஆலயத்தின் களஞ்சிய அறையை உடைத்துச் சென்ற யானைகள், அங்கிருந்த பொருட்களை முற்றாகச் சேதப்படுத்தியுள்ளது. இதனால் சுமார் 5 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X