2025 மே 05, திங்கட்கிழமை

வெள்ள அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வதென்பது தொடர்பான செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில்  விளக்கமளிக்கும் செயலமர்வு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுதாய மட்ட அனர்த்தக் குறைப்பை உள்வாங்குவதன் ஊடாக சமூகத்தின் அனர்த்த மீள்திறனைக் கட்டியெழுப்புதல் என்னும் இந்தச் செயற்றிட்டமானது தற்போது வடக்கு, கிழக்கு மாகாகணங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மேற்படி செயற்பாட்டை மேற்கொள்வது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்தின்  தலைமையில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜா, போரதீவுப்பற்று பிரிவிலுள்ள கிராம அலுவலர்கள்,  திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் ஒத்துழைப்புடனும்; கண்டிக்கப் இன்ரநெஷனல், ஒக்ஸ்பாம், சேவ்தசில்றன், அக்ரட், ஆகிய அரசசார்பற்ற அமைப்புக்கள் இணைந்தே இந்தச் செயற்றிட்டத்தை அமுல்படுத்தி வருவதாக இந்தத் திட்டத்தின் இணைப்பாளர் பிரசாத் எவாணி தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X