2025 மே 05, திங்கட்கிழமை

'மக்கள் விரும்பும் நல்லாட்சி' செயலமர்வு

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுநிறுவனங்களின் தலைவர்களுக்கு 'மக்கள் விரும்பும் நல்லாட்சி' எனும் தொனிப்பொருளில் செயலமர்வு ஒன்று காத்தான்குடியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுநிறுவனங்களின் தலைவர்களுக்கு 'மக்கள் விரும்பும் நல்லாட்சி' எனும் தொனிப்பொருளில் செயலமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் காத்தான்குடி நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற  இந்தச் செயலமர்வில் காத்தான்குடி நகர சபையின்  பதில் நகர முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், நகர சபை உறுப்பினர் உட்பட பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டார்.

இதன்போது மக்கள் விரும்பத்தக்க நல்லாட்சிக்கான 8 விடயங்கள் தொடர்பாகவும் திட்டமிடல் முகாமைத்துவம்  வினைத்திறன்  தொடர்பாகவும் விரிவுரைகள் ஆற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X