2025 மே 05, திங்கட்கிழமை

சவூதி அரேபியா முஸ்லிம் சமய கலாசார பணிப்பாளர் காத்தான்குடி விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


சவூதி அரேபியாவின் மத விவகார மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் கரீம் இப்றாகீம் இன்று வியாழக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளார்.

பொருளாதார அபிவித்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரிலேயே அவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது காத்தான்குடியில் நிர்மாணிக்கப்படும் மன்னர் அப்துல்லாஹ் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி மற்றும் இஸ்லாமிய நூதனசாலை ஆகியவற்றின் நிர்மாண வேலைகளை சவூதி அரேபிய அமைச்சர் இதன்போது பார்வையிட்டார்.

அத்துடன் காத்தான்குடியில் நடைபெறவுள்ள பல்வேறு வைபவங்களிலும் இவர் பங்குபற்றவுள்ளார். இவருடன் சவூதி அரேபியாவின் ஆசிய நாடுகளுக்கான  பணிப்பாளர் நாயமும் விஜயம் செய்துள்ளார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X