2025 மே 05, திங்கட்கிழமை

சித்த ஆயுர்வேத வைத்திய கண்காட்சி

Super User   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சித்த ஆயுர்வேத வைத்தியசேவை தொடர்பான கண்காட்சி மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

மட்டு. புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் இம்மாதம் 30ஆம் மற்றும் 1ஆம் ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது.

குறித்த வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான மூலிகைகள் தொடர்பான அறிவூட்டல் மற்றும் சித்த ஆயுர்வேத வைத்திய சேவை, ஆரோக்கிய வாழ்க்கை முறை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி என்பன நடைபெறவுள்ளன.

இந் நிகழ்வுகள் இம் மாதம் 30ஆம்திகதி மற்றும் ஒக்ரோபர் 01ஆம்திகதி ஆகிய தினங்களில் வைத்தியசாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X