2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மீனவர்களினால் டயர்கள் எரிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 26 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


ஓட்டமாவடி அல் மதீனா மீனவர்கள் சந்தை மூடப்பட்டு கருப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் டயர்களும் எரிக்கப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளருக்கும் ஓட்டமாவடி அல் மதீனா மீனவர் சங்க நிருவாகிகளுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு எதிப்பு தெரிவித்தே டயர்கள் எரிக்கப்பட்டுள்ளன. குறித்த சந்தையில் தகரத்தினால் அடைக்கப்பட்ட 26 மீன் கடைகள் உள்ளன. இவற்றை அகற்றி புறநெகும - 2013 திட்டத்தில் 40 கடைகள் கொண்ட நவீன மீன் சந்தை ஒன்றை அமைப்பதற்கு ஓட்டமாவடி பிரதேச சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் நவீன மீன் சந்தை அமைப்பது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே மீனவ சங்க உறுப்பினர்களுக்கும் பிரதேச சபை தவிசாளருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மீனவ சங்க உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

"அல் மதீனா மீனவர் அமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களை வருமாரு வந்த அழைப்பை ஏற்று தாங்கள் சென்றதாகவும் கூட்டத்தில் தவிசாளர் நவீன மீன் சந்தை அமைப்பத்கு தற்போது இருக்கும் கடைகளை அகற்றுமாறு கூறியும் ஏன் அகற்றாமல் இருக்கின்றீர்கள் என்று கேட்டார்.

இதன்போது நாங்கள் கூறினோம் எங்களுக்கு பொறுத்தமான இடத்தை தாருங்கள். நாங்கள் எங்களது இடத்தினை அகற்றுகிறோம் என்று கூறிய போது தவிசாளர் நீங்கள் நினைப்பதை என்னால்  செய்ய முடியாது என்று தகாத வார்த்தைகளால் கூறியதுடன் எங்களுக்கு அடிக்கவும் வந்தார். அதனாலயே எங்களது மீன் கடைகளை மூடி இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்" என்றனர்.

இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கருத்துத் தெரிவிக்கையில்,

"புறநெகு 2013 திட்டத்தில் ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில் 40 கடைகளைக் கொண்ட நவீன் மீன் சந்தை ஒன்றை இருபது மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேலைகளும் ஒப்பந்தக் காரர்களிடம் ஓப்படைக்கப்பட்டு விட்டது. மூன்று மாதத்திற்குள் நவீன மீன் சந்தையின் வேலைகள் முடிவடைய வேண்டும்.

அதற்காக தற்போது மீன் கடைகளை வைத்துள்ளவர்களுக்கு தற்காலிகமாக மூன்று மாதத்திற்கு வேறு இடம் வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இடம் எங்களுக்கு வேண்டாம் வேறு இடம் தாருங்கள் என்று கேட்டு மிகவும் மோசமன முறையில் என்னை ஏசிவிட்டு சபையை விட்டு வெளியேறினார்கள்" என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X