2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விசர் நாய் கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை

Super User   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர சபை பிரிவில் விசர் நாய் மற்றும் தெரு நாய் கடியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"ஏறாவூர் நகர சபை பிரிவில் விசர் நாய் மற்றும் தெரு நாய்களினால் சில நேரங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர். இந்த நாய்கள் மாடு ஆடு போன்ற கால் நடைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனல் இந்த விசர் நாய் கடியை கட்டுப்படுத்த ஏறாவூர் நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன. ஏறாவூர் கால் நடை வைத்திய அலுவலகம், ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர் சுகாதார அலுவலகம், ஏறாவூர் பொலிஸ் நிலையம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .