2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஆலோசனைக்குழு கூட்டம்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல் சக்திவேல்


'கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்திவரும் சமூக நல்லாட்சிக்கான உட்கட்டுமான வேலைத் திட்டத்திற்குரிய அலோசனைக்குழு கூட்டம் வியாழக்கிழமை இரவு திருகோணமலையில் அமைந்துள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.

பாம் பவுண்டேஷன் அமைப்பின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் எஸ்.பாஸ்கரனின் ஏற்பாட்டின் கீழ் சமூக நல்லாட்சிக்கான உட்கட்டுமான வேலைத் திட்டத்திற்குரிய ஆலோசனைக் குழுவின்; தலைவரும் கிழக்கு மாகாண பிரதம செயலாளருமான எம்.டி.கே.எஸ்.அபயகுணவர்த்தனவின்; தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி, பாம் பவுண்டேஷன் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், பொறியியலாளர் ஏ.எஸ்.கௌரிபாலன், திட்டப் பணிப்பாளர் எம்.தமிழ்செல்வன், பிறட்டிக்கல் அக்ஷன் நிறுவனத்தின் பிராந்திய பொறியியலாளர்
அசோக்க அஜந்த, திட்ட முகாமையாளர் பிரசாத் ரத்தநாயக்க  ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில்  நல்லாட்சிக்கான உட்கட்டுமான வேலைத் திட்டத்தினுள் கொள்கைரீதியான மாற்றத்தினைக் கொண்டு வருதல், செயற்பாட்டுத் திட்டமிடலில் மாற்றத்தினை மேற்கொள்ளுதல், சனசமூக நிலையங்களில் உள்ள ஆலோசனைக் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரித்தல், பெண்களின் பங்களிப்பினை இத்திட்டத்தினூடாக அதிகரிக்கச் செய்தல், கிழக்கு மாகாணங்களிலுள்ள தவிசாளர்களைக் கொண்டு சமூக நல்லாட்சிக்கான உட்கட்டுமான வேலைத் திட்டத்திற்குரிய அபிவிருத்திக் குழுவினை அமைத்தல்  போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக இந்த ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டாளரும், பாம் பவுண்டேஷன் அமைப்பின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளருமான எஸ்.பாஸ்கரன் தெரிவித்தார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X