2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சுகாதாரம், முதலுதவி தொடர்பாக விளகக்கமளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ட ஆனையகட்டியவெளி கிராம மக்களுக்கு சுகாதாரம், முதலுதவி தொடர்பான விளகக்கமளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஆனைகட்டியவெளி கிராமத்திலுள்ள பொதுக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில், ஆனைகட்டியவெளி கிராமத்தின் கிராம சேவை உத்தியோகஸ்தர் எஸ்.சுகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவு நிர்வாகத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சுகாதாரம் மற்றும் முதலுதவி தொடர்பான விளக்கங்களை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையிலிருந்து வருகைதந்த முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன் மற்றும் சுகாதாரத் தொண்டர் சீ.லவகுமாரி ஆகியோர் வழங்கி வைத்தனர்.

'வருடாந்தம் மழை காலங்களில் பாதைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துகளின்றி அல்லலுறும் இந்தக் கிராம மக்களுக்கு சுகாதாரம் மற்றும் முதலுதவி தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டமை தற்போதைய காலத்திற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது' என கிராம சேவை உத்தியோகஸ்தர் எஸ்.சுகதாஸ் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X