2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இந்து கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை தொடர்பான செயலமர்வு

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 28 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்து கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை தொடர்பான செயலமர்வொன்று பலக்லைக்கழக  மாணவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்திலேயே மேற்படி செயலமர்வு நடைபெற்றது.
 
இந்த செயலமர்வில் வரலாற்றுத்துறை பேராசிரியர் சீ.பத்மநாதன், தமிழ்நாடு தொல்பொருள் திணைக்கள தொல்பொருள் உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.ராஜகோபல் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் திருமதி தேவகுமாரி ஹரன், கொழும்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி நிர்மலா கருணானந்தராஜா, மட்டக்களப்பு இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி எழில் வாணி பத்மகுமார் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் கலை மற்றும் நடன, நாடக கற்புலத்துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .