2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஆரையம்பதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 28 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்,ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள 4 ஆம் கட்டை சந்தியில் இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த வீதியினால் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று மோதுண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயித்தியமலை பிரதேசத்தை சேர்ந்த ராஜேந்திரன் (33) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தவர் என பொலிசார் குறிப்பிட்டனர்.

படுகாயமடைந்த இவரை ஆரையம்பதி வைத்திய சாலையில் அனுமதித்து பின்னர் மட்டக்களப்பு போனதா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தையடுத்து குறி;ப்பிட்ட லொறிக்கு அந்த பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்கள் ஆத்திரமடைந்து கற்கலால் எறிந்துள்ளனர்.இதனால் லொறியின் கண்ணாடிகள் சேதத்துக்குள்ளாகியுள்ளனதுடன் அவ்விடத்தில் சற்று அமைதியின்மையும் ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்தலத்திற்கு  விரைந்த காத்தான்குடி பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் லொறி சாரதியையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X