2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாங்காய் சாப்பிட்ட மாணவிகள் வைத்தியசாலையில்

Super User   / 2013 செப்டெம்பர் 30 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் இன்று திங்கட்கிழமை திடீர் சுகயீனமுற்றுள்ளனர். இவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கிருந்த மாணவிகளில் 7பேரே திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.

இவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஐந்து மாணவிகள் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் இரண்டு மாணவிகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக ஆரையம்பதி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பாடசாலையின் விடுதியில் 77 மாணவிகள் தங்கியிருக்கின்றனர். இவர்களில் 15 மாணவிகளுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாந்தி மற்றும் வயிற்றோட்டம் போன்ற திடீர் நோய்கள் குறித்த மாணவிகளிடம் காணப்பட்டமையினாலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தையடுத்து அங்கு சென்ற மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழு விசாரணைகளை மேற்கொண்டனர்.

எனினும் இந்த மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனம் ஏற்படவில்லை என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.எனினும் இந்த பாடசாலையின் குடிநீர் பரிசோதிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தியிடம் வினவியபோது,

" இந்த சம்பவத்தை கேள்வியுற்று பாடசாலைக்கு சென்று விசாரணை செய்ததுடன் குறிப்பிட்ட மாணவிகள் சிலர் மாங்காய்களை உட்கொண்டுள்ளனர். இதனால் ஒரு சில மாணவிகளுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. எனினும் மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X