2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாதுகாப்பான முறையில் புலம்பெயர்தல் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாணிக்கப்போடி சசிகுமார்


முறையற்ற வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் புலம்பெயர்தல் தொடர்பான செயலமர்வு ஒன்று இன்று வௌ;வாய்க்கிழமை மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்டப் பணிமனையில் இடம்பெற்றது.

சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பினுடாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்;பாட்டில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திராவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மண்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 49 இளைஞர் கழகங்களின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இருந்து சட்டவிரேதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் நிலை அதிகரித்துள்ள நிலையில் இதனால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்து பாதுகாப்பான முறையில் புலம்பெயர்வதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக  இச்செயலமர்வு இடம்பெற்றது.

குறிப்பாக முறையற்ற விதத்தில் அவுஸ்திரேலியா செல்வதனால் ஏற்படும் பாரிய பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏம்.எல்.எம்.என்.நைறூல் கலந்துகொண்டதுடன் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் திட்ட அலுவலகர் பி.புனிதகரன்,திட்ட இணைப்பாளர்களான திருமதி மேரி லம்பெட்,சாங்கி சண்முகநாதன் ஆகியோர் முறையற்ற வெளிநாட்டுப் பணயத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் புலம்பெயர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தினர்.

இதேவேளை இப்பயணத்தின்போது ஏற்படும் சுகாதார பிரச்சினை தொடர்பாக பொது சுகாதாரப் பரிசோதகர் பி.மனோகரன் தெளிவுபடுத்தியதுடன் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி என்.ஏ.எல்.பெர்னாண்டோ தெளிவுபடுத்தினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X