2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வடமுனைக்குளத்தின் புனரமைப்புப் பணிகளை மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் பார்வை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வடமுனைக்குளத்தின் புனரமைப்புப் பணிகளை மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயச் செய்கையை அதிகரிக்கும் வகையில், சேதமடைந்துள்ள நீர்ப்பாய்ச்சல் குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 'கிழக்கின் உதயம்' வேலைத்திட்டத்தின் கீழ் வடமுனைக்குளம் சுமார் 2 கோடியே 40 இலட்சம் ரூபா செலவில்  புனரமைக்கப்பட்டு வருகின்றது.

நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் குளம் புனரமைக்கப்படுவதன் மூலம்; செங்கலடி தொடக்கம் வெலிக்கந்தை வரையான பகுதிகளில் உள்ள சுமார் 2,000 ஏக்கர் நெற்செய்கையில் ஈடுபடுவோர் நன்மை அடைய முடியும் என மீள்குடியேற்றப்  பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்தக் குளத்தின் புனரமைப்புப் பணிகள்  இந்த வருடத்தில் முழுமை பெறும் எனவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X