2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் அமைச்சரின் குடும்ப மயானம் தோண்டப்படுகிறது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்..ஹுஸைன்

முன்னாள் அமைச்சர் ஒருவரின் குடும்ப மயானத்தை விசேட அதிரடிப்படையினர் தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் கே.டப்ளியு. தேவநாயகத்தின் குடும்ப மயானமே தற்போது தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி-பதுளை வீதியிலுள்ள அவரது குடும்ப மயானமே தோண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்த மயானத்திற்குள் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் இன்றேல் பெருந்தொகையில் பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலையடுத்தே விசேட அதிரடிப்படையினர் மயானத்தை தோண்டிக்கொண்டிருக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • KB Wednesday, 02 October 2013 10:32 AM

    தோண்டுங்கோ, தோண்டுங்கோ. தோண்டிக்கொண்டே இருங்கோ. உங்களுக்கும் வேலை வேண்டுந்தானே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X