2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

'உணவகங்களில் தேங்காய் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு மற்றும் சிற்றுண்டி பொருட்கள் தயாரிக்கும்போது தேங்காய் எண்ணெய் அல்லது அதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும்' என காத்தான்குடி நகர சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவு மற்றும் சிற்றுண்டி பொருட்கள் தயாரிக்கும்போது ஒருமுறை பாவனைக்குட்படுத்தப்படும் எண்ணெய் மீளவும் பாவனைக்குட்படுத்தப்படுவதாக காத்தான்குடி நகரசபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் உணவு மற்றும் சிற்றுண்டி பொருட்கள் தயாரிக்கும்போது தேங்காய் எண்ணெய் அல்லது அதற்காக பயன்படுத்தப்படும் எண்ணெய்களை ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும் என அதன் உரிமையாளர்களை காத்தான்குடி நகர சபை அறிவுறுத்தி வருவதாக காத்தான்குடி நகர சபையின் பதில் நகர முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.அலிசப்ரி காத்தான்குடி நகரசபையின் கடந்த அமர்வுக் கூட்டத்தின் போதும் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை, காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளை காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்களை கொண்டு பரிசோதணை செய்வதற்கு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறி;ப்பிட்டார்.

இப்பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், பேக்கரிகளில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் ஐஸ் கிறீம் விற்பணை செய்பவர்கள் போன்றோருக்கு நோய் தொற்று உண்டா என்பதை பரிசோதிக்கும் பொருட்டு காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதணை செய்யப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X