2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மது ஒழிப்பு தினத்தில் மதுவிற்ற நால்வர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மது ஒழிப்பு தினமான இன்றைய தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த சுற்றுலா விடுதியை சுற்றிவளைத்த அதிகாரிகள் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான மது மற்றும் வெளிநாட்டு குடிவகைகளும் கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட இத்தேடுதலில் சந்தேகத்தின் கைது செய்யப்படட்வர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்கள் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி கே.தங்கராசா தலைமையிலான குழுவினரே இச்சுற்றி வளைப்பினை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X