2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் கலைமகள் வித்தியால வீதியில் கைக்குண்டு மீட்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 05 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியால வீதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 
துப்பறியும் தகவல் கிடைத்ததன் பேரில் தாம் இந்தக் குண்டை மீட்டதாக பொலிஸார் கூறினர்.
 
இன்று சனிக்கிழமை நண்பகலளவில் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
 
ஆறுமுகத்தான் குடியிருப்பு- கலைமகள் வித்தியாலய வீதியிலுள்ள பாழடைந்த வளவிற்குள் உள்ள மாமரத்தடியிலிருந்து இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. இது ஒரு பழைய குண்டு என்றும் பொலிஸார் கூறினர்.
 
குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரைக் கொண்டு தாம் இந்தக் குண்டை செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 
ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X