2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீண்டும் கிழக்கு மாகாணத்துக்கு நியமனம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 05 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,தேவஅச்சுதன்
 
இடமாற்றம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர மீண்டும் கிழக்குக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இன்று சனிக்கிழமை காலை அவர் தனது மட்டக்களப்பிலுள்ள பழைய அலுவலகத்தில் கடமைப் பொறுப்பை ஏற்றார்.
 
பொலிஸாரை முழந்தாளிட வைத்த சர்ச்சையில் சிக்கியதனால் அதனை விசாரிப்பதற்கென கொழும்பிலிருந்து விஷேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
 
அதன் பின்னர் கடந்த 23.09.2013 அன்று அவருக்கு கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.
 
அவரது இடத்திற்கு ஊவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
எனினும் மீண்டும் தற்போது பூஜித்த ஜயசுந்தர கிழக்கு மாகாணம் திரும்பி தனது கடமைப் பொறுப்பையேற்றுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X