2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. சிறைக்கைதி உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர்  சிறைச்சாலையின் கூரை மீதேறி  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

மட்டக்களப்பு, புதூரைச் சேர்ந்த ஆனந்தன் என அழைக்கப்படும் அன்ரன் ஜெயராஜ் (வயது 28) என்ற கைதியே இவ்வாறு கூரை மீதேறி உண்ணாவிரதத்தில்   ஈடுபட்டு வருகின்றார்.

இவர் தன்னை பொலன்னறுவைச் சிறைச்சாலைக்கு இடமாற்றக் கூடாது எனக் கூறியே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில்  சிறைச்சாலையின் கூரை மீது இவர் ஏறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கைதிக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை பொலன்னறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றுமாறு நீதிமன்றம் கோரியதற்கு இணங்க இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை அவர் இடமாற்றப்படவிருந்தார். இந்த நிலையில், இந்தக் கைதி தன்னை இடமாற்றக் கூடாது எனக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு கூரை மீதேறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்ற இந்தக் கைதியை கூரையிலிருந்து கீழே இறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (படங்கள்:  ரி.எல்.ஜவ்பர்கான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X