2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி பெண் காயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட சின்னவத்தைக் கிராமத்தில்  பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சின்னவத்தைக் கிராமத்தினுள் நேற்று புதன்கிழமை (16) புகுந்த காட்டு யானை ஒன்று  பெண் ஒருவரை தாக்கியுள்ளதாக சின்னவத்தைக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கோபாலன் பிரசாத் தெரிவித்தார்.

சின்னவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தாயான சாமித்தம்பி தெய்வானை (வயது 50) என்பவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான இந்;தப் பெண்  முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தவிர கடந்த 14ஆம் சின்னவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X