2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய மாநாட்டுக்கு ஆசி வேண்டி மட்டக்களப்பில் விசேட பூசை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு வாழ்த்துத் தெரிவித்தும், மாநாட்டின் வெற்றிக்குமாக மட்டக்களப்பு பிரஜைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

பொதுநலவாய நாடுகளின் சகோதரத்துவத்தின் ஊடாக பிரஜைகளின் சமாதானத்திற்கும், ஒற்றுமை, சுபீட்சத்துக்குமாக இந்த விசேட வழிபாடுகளும் பூஜையும் பிரார்த்தனைகளும் நடைபெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் மன்றத்தின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை மதியம் 11 மணிமுதல் 12 வரை மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற இந்த விசேட பூசை வழிபாடுகளில் அரசாங்க அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .