2025 மே 01, வியாழக்கிழமை

மண்முனைத்துறைப் பாலத்தின் புதிய வீதியால் விவசாயிகள் கவலை

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, மண்முனைத்துறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்முனைத்துறைப் பாலத்தின் புதிய வீதியானது அங்கு பரம்பரை பரம்பரையாக நெற்பயிர் செய்யப்படும் வயல்களின் நிலமட்டத்தை விட 3 அடி உயரமாக நிர்மாணிக்கப்படுவதால் விவசாயிகள் எதிர்காலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தலைமையில்   பொறியியலாளர்களை கொண்ட குழுவினர் நேற்று வியாழக்கிழமை அந்த இடத்திற்கு சென்று அந்த வீதியின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டனர்.

மழைக்காலங்களில் நீர் இயற்கையாகவே வாவிக்குள் வடிந்தோடுகின்றது. அப்பாதை முற்றாக தடைப்படுவதனால் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் எதிர்காலத்தில் இக்காணிகளில் பயிர்செய்யமுடியாத நிலை ஏற்படும் என இதன்போது விவசாயிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் அவ்விடத்திற்கு நேற்று விஜயமேற்கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்  இதற்கான திட்ட வரைபுகளை உடனடியாக தயாரித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரும் ஜப்பானிய நிறுவன வதிவிட பொறியியலாளரும் உறுதியளித்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் என்னிடம் சுட்டிக்காட்டியதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின்
கடந்த கூட்டத்தில் கூறப்பட்டதற்கிணங்க இதை பார்வையிட்டு இதற்கான தீர்வு பெறப்பட்டதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் எம்.நிசார்தீன், விசேட திட்ட முகாமைப்பிரிவின்; பொறியியலாளரகள் ஏ.ஹகீம்,
கே.றஞ்ஜித்குமார்; ஜப்பானிய நிறுவன வதிவிட பொறியியலாளர் யசோரோ நறுகாவா, ஜப்பானிய ஒப்பந்தக்காரரின் பொறியியலாளர் கே.ஒமோரி ஆகியோர் இங்கு சமூகமளித்திருந்தனர்.

புதிதாக அமைக்கப்பட்டு வரும் மண்முனைத்துறைப்பாலத்தின் நிர்மான வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .