2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாழைச்சேனையில் உலக நீரிழிவு தின ஊர்வலம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமும் விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று (22) இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்திசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்திசாஇலையின் வைத்திய நிபுனர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,  வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை இலங்கை போக்குவரத்துசாலை ஆகியவற்றின் அதிகாரிகளும்,   வாழைச்சேனை வர்த்தக சங்கம் மற்றும் உலக தரிசனம் - கோறளைப்பற்று ஆகியவற்றின் அங்கத்தவர்களும்; கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதியினூடாக வாழைச்சேனை பொதுச் சந்தையை அடைந்து மீண்டும் அங்கிருந்து வைத்தியசாலை வரை சென்றது. இதன் பின்னர் வைத்தியசாலையில் நீரிழிவு நோயினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் அதிலிருந்து பாதுகாப்புத் தேடுவது தொடர்பாகவும் விழிப்புனர்வு கருத்துக்கள் வைத்தியர்களால் வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .