2025 மே 01, வியாழக்கிழமை

வாவித் தொழில் மீனவர்கள் ஒட்டி, ஓரா மீன்களைப் பிடிப்பதில் ஆர்வம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளில் மீன்பிடித்; தொழிலில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்கள் புதிய பொறிமுறையைப் பாவித்து ஒட்டி, ஓரா ஆகிய மீன்களைப் பிடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வீச்சு வலை,  தூண்டில் கொண்டு மீன்களைப் பிடிப்பதற்கு பதிலாக மெல்லிய இரும்பு இழைகளினால் பின்னப்பட்ட கூடுகளுக்குள் அல்கா தாவர இனப் பாசிகளை இட்டு அந்தக் கூடுகளை ஆற்றினுள் நிலையாக இடுவதன் மூலம் இவர்கள் மேற்படி  மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

பாசியை உண்பதற்காக கூட்டினுள் வரும் மீன்கள் வெளியே செல்லாதவாறான பொறிமுறையைப் பயன்படுத்தி; கூடுகளும் பின்னப்பட்டுள்ளன.
தற்போது வாவிகளில்; மீன்கள் அதிகமாகப் பிடிபடுவதனால் பிரம்பினால் பின்னப்பட்ட கூடுகளுக்குப் பதிலாக இவ்வகையான கூடுகளை மீனவர்கள்  பாவிப்பதாக மீனவரொருவர் தெரிவித்தார்.

நாளொன்றிற்கு சராசரியாக ஒரு மீனவர் 4 முதல் 6 கிலோவரை ஒட்டி, ஓரா மீன்களைப் பிடிக்கின்றார். இந்த நிலையில், ஒரு கிலோ  ஒட்டி, ஓரா மீன்கள் 300 ரூபா முதல் 400 ரூபா வரை விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .