2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிபர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவிலுள்ள 27 பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடங்களுக்காக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.

இதற்கான விண்ணப்பம் கோரும் கடிதமொன்றை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அகமட் லெவ்வை மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவிலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 14 பாடசாலைகளிலும்  ஏறாவூர் கல்விக் கோட்டத்தில் 8 பாடசாலைகளிலும் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் 5 பாடசாலைகளிலும் இந்த அதிபர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

எதிர்வரும் 30.11.2013ஆம் திகதிக்கு முன்பாக இதற்காக விண்ணப்பிக்குமாறும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அகமட் லெவ்வை  அறிவித்துள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .