2025 மே 01, வியாழக்கிழமை

'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம்' கொள்கை வெளியீடு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்


'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன்,  முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்' எனும் கொள்கை வெளியீடு ஒன்று முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (25) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் மேற்படி கொள்கை வெளியீடு  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் இணைப்புக்குழு உறுப்பினர் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், கண்டியைச் சேர்ந்த  செங்கொடி பெண்கள் இயக்கத்தின் ஸ்தாபகர் மேனகா கந்தசாமி உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது 'பெண்களின் உழைப்பை அங்கீகரிப்போம் என்பதுடன், முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல்' எனும் கொள்கை வெளியீட்டின் முதற்பிரதி மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரனுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வெளியீடானது முறைசாராப் பொருளாதாரங்களில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காக கூட்டாக தயாரிக்கப்பட்ட கொள்கை குறிப்பின் வெளியீடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .