2025 மே 01, வியாழக்கிழமை

காலி மாநகர பிரதிநிதிகள் மட்டக்களப்புக்கு விஜயம்

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜௌபர் கான்


காலி மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதன் அதிகாரிகள் திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்செய்தனர்.
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம்செய்த இவர்களை மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் அதன் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதன்போது இரண்டு மாநகர சபை பிரதிநிதிகளுக்குமிடையிலான ஒன்று கூடலொன்று மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் தமது அனுபவங்களையும் வேலைத்திட்டங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

காலி மாநகர சபையின் நடவடிக்கைகள் மற்றும் அதன் வேலைத்திட்டங்கள் பற்றியும் மட்டக்களப்பு மாநகர சபையின் வேலைத்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடினர். இதேவேளை, இந்த பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமுக பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தினர்.

இதில் காலி மாநகர சபை ஆணையாளர் ரணில் விக்ரமசிங்க, மற்றும் காலி மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பௌசுல் நியாஸ், ஜி.நிசாந்த, பி.சகிபால, ஆர்.றொசான் மவுசுல், கே.கபில கொபகே மற்றும் காலி மாநகர சபையின் நிருவாக அதிகாரி எம்.எஸ்.நயன தகாநாயக்க உட்பட அதன் அதிகாரிகளும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் கணக்களார் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .