2025 மே 01, வியாழக்கிழமை

'பொலிஸார் - பொதுமக்கள் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது'

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்த காலத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது என சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

எனினும் கிழக்கு மாகாணத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வேலையை கடந்த ஒன்றரை வருடமாக மேற்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளை சந்திதது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,

"கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது பொதுமக்களும் பொலிஸாருக்கும் இடையில் நெருக்கம் இருக்கவில்லை. யுத்த காலத்தில் மக்களை பாதுக்கும் வேலையையே பொலிஸார் மேற்கொண்டனர். பொது மக்களை பாதுகாப்பதற்கென விசேட அதிரடிப்படை பிரிவொன்று பொலிஸிலிருந்து ஒரு பகுதியாக ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த யுத்த காலத்தின் போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. எனினும் இந்த இடைவெளி இன்று இல்லை. பொலிஸார் மீது பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஒன்றரை வருடங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் என்பவற்றுடன் இணைந்து இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதை இந்த பூஜித ஜெயசுந்தர மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இங்கிருக்கின்ற அனைவருடைய ஒத்துழைப்புடனும் தான் இதை மேற்கொண்டோம். இது ஒரு கூட்டு முயற்சியாகும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .