2025 மே 01, வியாழக்கிழமை

'பெண்களுக்கு தொழிலாளர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்'

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பெண்களுக்கு தொழிலாளர் உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்' என மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆலோசகரும் இணைப்புக்குழு உறுப்பினருமான திருமதி பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார்.

மட்டக்களப்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'முறைசாரா தொழிற் துறைகளில் உள்ள பெண்களின் சமூக பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதே இந்த முறைசாராப் பொருளாதாரங்ளில் பெண்களின் பங்கை அங்கீகரித்தல் எனும் கொள்கைச் சுருக்கமாகும்.

முறைசாரா பொருளாதார துறைகளில் பெண்களின் பால்நிலை சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு சிறுகடன் திட்டங்கள் போன்ற சந்தையை முதன்மைப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள் சமூக பாதுகாப்புக்கு உகந்தவையல்ல.

தொழில் பாதுகாப்பும் அதே சமயம் பிரஜா உரிமை அடிப்படையில் சமூகப்பாதுகாப்புக்கு உரித்தும் பெண்களுக்கு கிடைக்க வேண்டும்.

சம்பளமற்ற பராமரிப்பு வேலைகள் சமூக ரீதியாக பயன்பாடுடையவை எனக்கருதப்பட்டு தேசியக் கணக்கீடுகளில் உள்ளடக்கபட வேண்டும்.
சமூக பாதுகாப்பு சகலருக்கும் பொது உரிமையாக்கப்பட வேண்டும், முன்னேற்ற கரமான வேலை நிலைமைகளும், பெண்களுக்கு தொழிலாளர் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சமூகப் பாதுகாப்பு உரிமைகள், சுகாதார காப்புறுதி, ஓய்வூதியம், சம்பள நிர்ணயம், மகப்பேற்று நலன்கள், பிள்ளை பராமரிப்பு சேவைகள், வேலை செய்யும் இடங்களில் ஏற்படக் கூடிய அபாயங்களை குறைத்தலும் பாதுகாப்பு வழங்குதலும், முறைசாரா தொழிலாளர் அமைப்புக்களையும் வலைப்பின்னல்களையும் உருவாக்குதல் மற்றும் இத்தகைய நிறுவனங்கள், அமைப்புக்கள் வலைப்பின்னல்கள் ஊடாக முறைசாராத் தொழிலாளரின் கூட்டு பிரதிநிதித்துவத்திற்கு இடம்கொடுத்தல் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

சகல பங்குதாரர்களும், ஒருங்கிணைந்து முறைசாரா பராமரிப்பும், பொருளாதாரங்களிலுள்ள பெண்கள் இலங்கையின் பிரஜைகள் என்ற வகையில் தமது முழுமையான உரிமைகளை அனுபவிப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .