2025 மே 01, வியாழக்கிழமை

விபத்தில் மூதாட்டி பலி

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்றுள்ளது.

வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த வயோதிப பெண் மீது அந்த வீதியால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், வவுணதீவைச் சேர்ந்த 85 வயதுடைய காந்தமுத்து வல்லிப் பிள்ளை எனும் மூதாட்டியே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுணதிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .