2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒன்றுகூடல்

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜௌபர் கான், தேவ அதிரன்


இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு மாகாண அரச அதிகாரிகளின் ஒன்றுகூடல் மட்டக்களப்பு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

21ஆம் நூற்றாண்டில் பொதுநிர்வாக அதிகாரிகளின் சட்டதிட்டங்கள் மாற்றம் பற்றிய கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

நிதி ஆணைக்குழுவின் தவிசாளர் ஆரியரட்ண கேவஹே, பிரதமர் செயலக மேலதிக செயலாளர் கலாநிதி மஹாநாம, மேலதிக செயலாளர் (காணி) பொறலஸ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபேகுணவர்த்தன மற்றும் மட்டு. மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .