2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இளைஞர்களுடன் கலந்துரையாடல்

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வவுணதீவு பிரதேசத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் இடங்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இலங்கை சிறுவர் நிதியத்திற்கும் வவுணதீவு பிரதேச இளைஞர் கழக பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றது.

வவுணதீவில் அதிகம் சிறுவர் துஷ்பிரயோகம் எங்கு இடம்பெறுகின்றது, எவ்வாறு இடம்பெறுகின்றது என்பதை ஆராய்ந்து படிநிலைப்படுத்துவதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதனடிப்படையில் ஆராய்ந்து துஷ்;பிரயோகங்கள் இடம்பெறும் இடங்கள் படிநிலைப்படுத்தப்பட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டன.இந்த கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை புதுமண்டபத்தடி இளைஞர் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் இடம்பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .