2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புதிய முறையில் இறால்கள் பிடிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு வாவியில் தற்போது இறால் பருவகாலம் ஆரம்பமாகியுள்ளதால், கரைவலை வீச்சு மீனவர்கள் புதிய முறையைப் பயன்படுத்தி இறால்களை பிடித்து வருகின்றனர்.

இறால்களைப் பிடிப்பதற்காக கல்லடிப்பாலம், கோட்டைமுனைப்பாலம் மற்றும் புதிய பாலங்களின் கீழான ஆற்றினுள் மண்மூடைகளைக் கொண்டு மீனவர்கள்  மேடையமைத்து வருகின்றனர்.

இரவு வேளைகளில் பிரகாசமான எரிலாம்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் இறால்கள் ஒளியை நாடிவரும்போது, வலைகளை வீசி இறால்களைப் பிடிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாவியில் அமைக்கப்பட்டுள்ள கடல்பிளேன் இறங்குவதற்கு பயன்படுத்தும் இறங்கு துறை மேடையையும் மீனவர்கள் பயன்படுத்துகின்றன

இந்தக் காலத்தில் ஒரு இரவில் மாத்திரம் மீனவர் ஒருவர் சராசரியாக   4 கிலோ  முதல்  6 கிலோ வரை இறால்களைப்  பிடிக்கின்றார். இவ்வாறு பிடிக்கப்படும் ஒரு கிலோ பெரிய இறாலின் விலை  400 ரூபா முதல் 600 ரூபா வரை மட்டக்களப்பில் விற்பனையாவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில், வெளியிடங்களிலிருந்து மட்டக்களப்பிற்கு  வரும் உள்ளூர்ச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக இறால்களை கொள்வனவு செய்கின்றனர். 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .