2025 மே 01, வியாழக்கிழமை

வீதியை அகலமாக்கி காபட் வீதியாக புனரமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஊர் வீதியை அகலமாக்கி காபட் வீதியாக புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 160 மில்லியன் ரூபா நிதியை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ளார்.

தற்போது இவ் வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் இவ் வீதியினால் மக்கள் பயணிப்பதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மழை பெய்தால் இந்த வீதியில் காணப்படும் குழிகளுக்குள் வெள்ளம் தேங்கி நிற்கின்றனது.

இதை கருத்திற்கொண்டு இவ் வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கு முதல் தற்போது இவ் வீதியில் காணப்படும் குழிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் குறிப்பிட்டார்.

இதற்காக இவ் வீதியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பெரிறியலாளர் ஏ.சி.நிசார்தீன் ஆகியோர் சென்று பார்வையிட்டு வீதியை அகலமாக்குவது குறித்தும் கலந்துரையாடினர்.

இவ் வீதியானது காத்தான்குடியில் மிக முக்கிய வீதிகளில் ஒன்றாகவும் ஆரம்ப காலத்தில் கல்முனை மட்டக்களப்புக்கான பிரதான வீதியாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .