2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

படகுத்துறை, மீன் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு – ஏறாவூர் வாவிக்கு அருகில் மீனவர் படகுத்துறை ஒன்றும் மீன் விற்பனை நிலையம் ஒன்றும்  நிர்மாணிப்பதற்கான அடிக்கல்கள்  இன்று ஞாயிற்றுக்கிழமை  நாட்டி வைக்கப்பட்டன. 

ஒரு கோடி ரூபா திட்டச் செலவில் படகுத்துறையும் விற்பனை நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு  மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மேற்படி படகுத்துறை மற்றும் மீன் விற்பனை நிலையத்திற்கான நிர்மாணப் பணிகள் வெகு விரைவில் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ், பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம், நகரசபைச் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .