2025 மே 01, வியாழக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தெரு நாடகம் ஏறாவூர் வாவிக்கரையோர சிறுவர் பூங்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

கிராமிய மட்ட சிறுவர் உரிமைகள் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் சிறுவர் கழகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இதற்கான நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிறுவர் நலன்களைப் பாதிக்கக்கூடிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறுவர் துஷ்பிரயோககங்களில் ஈடுபடுபவர்களுக்கும் விழிப்புணர்வூட்டுவதே இத்தகைய தெரு நாடகங்களின் நோக்கம் என சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகம் தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களுக்காக சிறுவர்களை  பாடசாலைகளிலிருந்து இடைவிலக்கல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், சிறுவர்களை போதைப்பொருள்களை வாங்கவோ, விற்கவோ பயன்படுத்துதல் உள்ளிட்ட  விடயங்கள் தொடர்பில்  எளிய நடையில் விழிப்புணர்வூட்ட இத்தகைய தெரு நாடகங்களும் விழிப்புணர்வு நிகழ்வுகளும் துணை புரிவதாகவும் அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .