2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

த.ம.வி.பு. அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள்  உறுப்பினருமான விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விளாவெட்டுவானில் உள்ள சவற்சாலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .