2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாதையில் வந்தவர் மயங்கி விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்லடி ஆற்றைக் கடக்கும் பாதையில் சென்றுகொண்டிருந்த விவசாயி ஒருவர் இன்று திங்கட்கிழமை (02) மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான தம்பிப்பிள்ளை அரசரெட்ணம் (வயது 49) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நபரிடம், ஆற்றைக் கடக்க காத்துக்கொண்டு நின்றவர்கள் பாதையை எடுத்து வருமாறு கூவி அழைத்துள்ளனர்.

இந்த நிலையில், இவர் பாதையை எடுத்துக் கொண்டு கல்லடித் துறைப்பக்கம் சென்று பாதைக்காக காத்திருந்தவர்களை ஏற்றிக் கொண்டுவந்தார்.  பாதையும்  சின்னக்குளம்  நோக்கி வந்துள்ளது.

இவ்வாறு வரும்போதே ஆற்றின் இடைநடுவில்  அவர் பாதையில் மயங்கி விழுந்துள்ளார்.

பாதையில் வந்தவர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலையில் எடுத்துச்சென்றபோதிலும், அவர் இடைவழியில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் தற்போது வெருகல் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .