2025 மே 01, வியாழக்கிழமை

புனித திரேசா பெண்கள் பாடசாலை மாணவர்களின் சித்திரக் கண்காட்சி

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு  கல்வி  வலயப் பாடசாலை  மாணவர்களினால்  சித்திரக் கண்காட்சி  நேற்றைய தினம் வியாழக்கிழமை புனித  திரேசா  பெண்கள்  பாடசாலையில்  சித்திரக்கல்வி  வலய, சித்திர  பாட  சேவைக்கால ஆசிரியர்  ஆலோசகர் சி.ரவீந்திரன்  தலைமையில் ஆரம்பமானது.

இக்கண்காட்சியானது பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதிக்கல்விப் பணிப்பாளர் குருகுல சிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்வி வலயத்தின் அனுசரணையுடன் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுவருகின்றது.

இச் சித்திரக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு  கல்வி வலய பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது வைக்கப்பட்டுருந்த அனைத்து  சித்திரங்களும் மற்றும் கைவினை சித்திரங்களும் மாணவர்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .